June 8, 2014

சோமாலிய கடற்கொள்ளையரிடம் நான்கு ஆண்டுகளாக வசமிருந்த 3 இலங்கை மாலுமிகள் விடுதலை!



சோமாலிய கடற்கொள்ளையர்களினால் நான்கு ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள்
நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று இலங்கையர்கள் அடங்கிய 11 கப்பல் பணியாளர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.2010ம் ஆண்டு கப்பல் ஒன்றை கடத்திய கடற் கொள்ளையர்கள் குறித்த கப்பல் பணியாளர்களை பணயமாக வைத்து பணம் பெற்றுக்கொள்ள முயற்சித்திருந்தனர். எம்.வீ. அபேடோவ் என்ற கப்பலின் தொழிலாளர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சோமாலிய கடற்கொள்ளையர்களில் சிலரே குறித்த கப்பல் பணியாளர்களை, ஏனைய கடற் கொள்ளையர்களுக்கு தெரியாமல் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment