June 8, 2014

மீனவர்களின் கைது நடவடிக்கையைத் தடுத்துக! மோடியிடம் கோரிக்கை விடுத்தார் ஜெயலலிதா!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமையை தடுத்து நிறுத்த உடனடியான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 82 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கைதுகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

எத்தனையோ தடவை சிறிலங்கா அரசாங்கம் இந்த விடயத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தும், இத்தகைய காரியத்தை தொடர்ந்தும் இலங்கையின் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அரசாங்கம் இது தொடர்பில் உயர் மட்ட ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

No comments:

Post a Comment