மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் மகிந்தவின் ஆணைக்குழுவின், மூன்றாம் நாளுக்கான சாட்சிப் பதிவுகள் இன்று இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாம் நாள் சாட்சி விசாரணைகளில் 40 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாம் நாள் சாட்சி விசாரணைகளுக்காக 54 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 26 பேர் இன்று சாட்சியளித்துள்ளனர். இதேவேளை இன்று புதிதாக 83 பேர் முறைப்பாடுகள் முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுபட்ட அமர்வுகளின் போது 112 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 15ற்கும் மேற்பட்ட புதிய முறைப்பாடுகளும் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
குருக்கள் மடத்தில் 163 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அநேகமானோர் இந்த இரண்டு தினங்களிலும் சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக் காட்டினார்.
காணாமற்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு நாளை நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment