June 9, 2014

சாட்சி வழங்கியோருக்கு பாதுகாப்பு! காணாமல் போனோருக்கான ஆணைக்குழு!

தமது ஆணைக்குழுவின் முன்னால் சாட்சி வழங்குகின்றவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழு தற்போது மட்டக்களப்பில் தங்களின் விசாரணைகளை நடத்தி வருகிறது. எனினும் ஆணைக்குழுவின் முன்னாள் சாட்சி வழங்குகின்றவர்களுக்கு போது பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் தம்மிடம் சாட்சி வழங்கியுள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. மேலும் சாட்சி வழங்குவதில் பாதுகாப்பு பிரச்சினை இருக்குமாக இருந்தால், இரகசியமாக சாட்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment