நாட்டில் தரமான கல்வியை வழங்க ஆசிரியர்களை இப்புத்தாண்டிலிருந்தாவது
சுதந்திரமாக நிம்மதியாக பணியாற்ற விடுங்கள். என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மேலும் - ஒரு நாட்டில் மிகமுக்கியமான பணியில் உள்ளவர்களுள் ஆசிரியர்களே முதன்மையானவர்கள். அவர்களின் தொழிலுக்கும், கடமைக்கும் பங்கம் ஏற்படும் விதத்தில் எவரும் நடந்துகொள்ளக் கூடாது. ஆன்மீக வாழ்வோடு இரண்டறக் கலந்த கல்வி வாழ்க்கை இடைநடுவில் தடைப்படாமல் இருக்க அனைவரும் இதய சுத்தியுடன் பங்காற்றவேண்டும். நாட்டில் அரச துறையில் எண்ணிக்கை கூடிய தொழிலாளர் துறையாக ஆசிரியவர்க்கம் திகழ்வதால் அனுகூலங்கன் காணப்படுகின்ற அதேவேளை பிரதிகூலங்களும் காணப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆசிரியர்களுக்கான வேதனம் என்பது அவர்களது வாழ்க்கைச்செலவைச் சமாளிக்க போதுமானதல்ல. அதனால் சமகாலத்தில் சமூகஅந்தஸ்தைப் பேணுவதில் அவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கிவருகின்றார்கள்.தற்போது ஆசிரியர் இடமாற்றம் என்பது எப்போதும் எந்நேரமும் நடக்கலாம் என்ற துரதிஸ்ட வசமான நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கில் வருடம் பூராக இந்நிலைமை காணப்படுகின்றது. முன்னரெல்லாம் வருடஇறுதியில் இடமாற்றசபைகளின் தீர்மானத்திற்கமைவாக நேர்மையாக நீதியாக இவ்விடமாற்றங்கள் நடைபெற்றுமுடிந்துவிடும்.
ஆனால் இன்று நிலைமை வேறு.ஆசிரியர்கள் இவ்வாறு நேரங்காலம் இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுவதனால் அவர்கள் நிம்மதியில்லாமல் சீரான கற்பித்தலை மனம்வைத்து கற்பிக்கமுடியாமலுள்ளது. எனவே அவர்களை சுதந்திரமாக நிம்மதியாக பணியாற்றவிடவேண்டும்.100 வீதம் அடைவுமட்டத்தை கூட்டிக்காட்டவேண்டும் என கேட்பதைவிடுத்து அதற்கு முக்கிய பாத்திரமான ஆசிரியர்களின் நலன்கள் பேணப்படுவதில் கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் இதயசுத்தியுடன் நிம்மதியாக சுதந்திரமாக கற்பிக்கும் சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றுள்ளது.

No comments:
Post a Comment