யாழ். வடமராட்சி, பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், முன்னாள் போராளியும், புனர்வாழ்வு பெற்றவருமான பத்திரிநாதன் அலன்மன்ரோ (வயது-30)
என்பவர் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
இவர் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை, முனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களை விட மேலதிகமாகத் தேடப்பட்டு வந்த நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கிளிநொச்சிக்குச் சென்று கொண்டிருக்கையில், கைது செய்யப்பட்டதாகவும் இவரையும் வவுனியாவிற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கில் ரி.ஐ.டி யினரால் சுமார் 50 ற்கு மேற்பட்டவர்கள் கடந்த ஒருமாத காலத்திற்குள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment