April 18, 2014

தேவிகனுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறி மற்றொருவருக்கு வலைவீச்சு!

இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் தேவிகனுடன் தொடர்புகளை பேணி வந்தார் என்ற அடிப்படையில் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த
வர்த்தகர் ஒருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் அவர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பி சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்னால் இருந்த அவரது வர்த்தக நிலையத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதற்கு சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த வர்த்தக நிலையத்தில் பணிப்புரிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment