இன்றைய தினத்தில் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனமும் தமிழகத்தின்மீதே படிந்திருக்கின்றது. தமிழக மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?
என்ற பதைப்புடனேயே காத்திருக்கின்றது.
இப்படி ஒரு காத்திருந்த நாளில்தான், ஈழத் தமிழர்கள் காவு கொள்ளப்பட்டார்கள். எங்களைக் காப்பாற்ற, கடல் கடந்து ஒரு கப்பல் வராதா…? என்று ஏங்கித் தவித்திருந்த நாட்களில்தான் ஈழத் தமிழினத்தின்மீதான இன அழிப்பிற்குத் தமிழகத்தின் அங்கீகாரமும் கிடைத்தது.
2009 மே மாதத்தில் இப்படியான ஒரு தேர்தலின் முடிவு தங்களை இறப்புக்களிலிருந்தாவது மீட்டெடுக்கும் என்று ஈழத் தமிழினம் கண்ணீரோடு காத்திருந்த வேளையில்தான், தமிழகமும் சேர்ந்தே கொலைகாரக் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. அந்த ஆட்சியை அமைத்துக் கொடுக்க அன்றைய முதல்வர் கருணாநிதி ஈழத்தில் நடைபெற்ற அத்தனை கொடூரங்களையும் தமிழக மக்களுக்கு மறைத்து நின்று நாடகம் நடாத்தினார். தமிழீழம் தீ குளித்தபோது, அதனை மறைத்த கலைஞர் தொலைக்காட்சி, தமிழக மக்களுக்கு ‘மானாட, மயிலாட’ மயக்கும் நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டது.
தமிழ், எங்களுக்கு வரமா? சாபமா? என்று ஈழத் தமிழர்கள் தலையில் அடித்துக்கொண்டார்கள். பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த முத்துக்குமாரனாலும் எதுவும் செய்துவிட முடியவில்லை. பதவியும், பணமும் கண்ணை மறைக்க, முத்துக்குமாரனின் ஈகத்தையும், ‘வயிற்று வலியால், முத்துக்குமாரன் மரணத்தைத் தழுவினான்’ என்று மனம் பதைக்காமலேயே புது டெல்லிக்குப் பாய் விரித்துவிட்டுக் காவல் இருந்தார் கருணாநிதி.
ஈழம் அழிந்தது. இனப் பகையின் ஒரு பாகம் நிறைவுற்றதாக சோனியா நிறைவுற்றார். கருணாநிதிக்கு கேட்ட பதவிகளும் வழங்கப்பட்டது. கோடிகளுக்கான கதவுகளும் திறந்து விடப்பட்டது. வாய் நிறைந்த புன்னகையுடன், வரம் கொடுத்த அன்னை சோனியாவின் வாழ்த்துக்களுடனும் தமிழகம் திரும்பிய கருணாநிதியின் நாடகம் உச்சத்தைத் தொட்டது.
சிங்களத்தின் வெற்றியை உறுதிப்படுத்தவும், கொடியவன் ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும் மகள் கனிமொழியுடன் சில பதர்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். உயிரை மட்டுமே கையில் பிடித்தபடி முள்வேலி முகாம்களுக்குள் முடங்கிக்கிடந்த மூன்று இலட்சம் தமிழர்களையும் வேடிக்கை பார்த்தவர்கள் மீண்டும் கொழும்புக்கு வந்து மகிந்த கையால் பரிசுகளையும் வாங்கிக்கொண்டு திரும்பியதெல்லாம் பழங்கதையாகப் போய்விட்டது.
உண்மையை அறிந்துகொண்ட தமிழகம் கொதித்து எழுந்தது. கொடியவன் ராஜபக்சேயிற்கு கொஞ்சமும் சளைக்காத கோர புத்தி கொண்ட கருணாநிதி தமிழகத்தின் ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். ஆனாலும், தமிழினத்திற்கு சஞ்சலம் இருக்கத்தான் செய்தது. அப்போதும் சில கருப்பாடுகள் சட்டசபைக்குள் நுழைந்து கொண்டன.
காங்கிரஸ் கட்சி இப்போதும் சொல்கின்றது ஈழத் தமிழர்களுக்கு எதையோ எல்லாம் செய்தோம் என்று. வாழ்வதற்கு வரம் கேட்டால், வாய்க்ரிசிக்கு நெல் அனுப்புவதா…? ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்களுக்கு அத்தனை வளங்களையும் அள்ளி வழங்கிய காங்கிரஸ் கட்சி சொல்கின்றது, தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம் என்று. இது சிங்களத்தின் கொடூரங்களையும் மிஞ்சிய துரோகங்கள். தமிழீழத்தைச் சுடுகாடாக்குவதற்கு ஆலோசனைகளும், ஆயுதங்களும் இந்தியா வழ்கியதை இப்போதும் சிங்கள ஆட்சியாளர்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றார்கள்.
இறுதி யுத்தத்தின் போது இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியதாகவும், இந்தியாவினால் ஆயுதங்கள், பயிற்சிகள், புலனாய்வுத் தகவல்கள் போன்றன வழங்கப்பட்டதாகவும் சிறிலங்காவின் இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இன்று தெரிவித்துள்ளார். அத்துடன், இறுதி யுத்த காலத்தில் இந்திய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டமை தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டினை மறுக்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.
இப்போது, தமிழக மக்கள் ஈழத் தமிழினத்திற்கு நீதி வழங்கவேண்டிய தருணம். ஈழத் தமிழினத்தின்மீது இந்திய அரசியல் சாசனத்தை மீறிய போர்க் குற்றம் புரிந்த, தமிழின அழிப்பிற்குத் துணைபோன காங்கிரஸ் கட்சிக்குத் தண்டனை வழங்க வேண்டும். சோனியாவின் கொலை வெறி, இன அழிப்புக்குத் துணை நின்ற தி.மு.க. தமிழகத்தில் நிராகரிக்கப்பட வேண்டும்.
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பாண்டியரும், வங்கக் கடல்கடந்து புலிக்கொடி ஏற்றிய சோழரும், கங்கை கடந்து கல்லெடுத்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரரும் கதையாகிப் போன பின்னர், சபிக்கப்பட்ட இனமாகத் தமிழினம் இன்றுவரை உலகப் பரப்பெங்கும் தலை குனிந்தே நிற்கின்றது.
தமிழனம் சாப விமோசனம் பெற வேண்டுமானால், தமிழகம் நீதியின் பக்கம் நிற்க வேண்டும். ஈழத் தமிழர்கள்மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை கொடூரங்களுக்கும் காரணமான காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் கட்டுப்பணத்தை மீளப் பெறக்கூடாது. ஈழத் தமிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய பாவத்தின் சம்பளத்தை தி.மு.க.விற்கு வழங்கியே ஆகவேண்டும்.
தமிழீழத்தின் விடுதலை, தமிழினத்தின் விடுதலை. உலகப் பரப்பில், தமிழனுக்கு ஒரு நாடு என்பது தமிழீழத்தில் இப்போதும் சாத்தியமே. உலகத் தமிழினம் சாபத்திலிருந்து விடுபட வேண்டுமாயிருந்தால், தமிழக மக்களால் மட்டுமே அதனைச் செயற்படுத்த முடியும்.
தமிழக மக்களால், தமிழினம் சாபவிமோசனம் அடையுமா…? தமிழீழம் கண்ணீரோடு மீண்டும் காத்துக் கிடக்கின்றது!
- சுவிசிலிருந்து கதிரவன்

No comments:
Post a Comment