கடந்த 16.04.2014 அன்று வேணாவில், இரணைப்பாலை, சிவநகர், ஆனந்தபுரம்,
வலைஞர்மடம் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்புகளின் போதே, வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனிடம் மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாமை, அதனால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாடு வறுமையால் தாம் பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ளதாக மக்கள் குமுறியுள்ளனர்.
குறித்த சந்திப்புகளின் போது மக்கள்இ காணி தொடர்பிலான முரண்பாடுகள்இ வீட்டுத்திட்டம் இழுபறிநிலைஇ வீதி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள், மின்சாரம் மற்றும் நிவாரணம் வழங்கப்படாமை, குடிநீர் தட்டுப்பாடுஇ உணவு உற்பத்தி, சுயதொழில் மற்றும் தொழில் வாய்ப்புகள் இல்லாமை உள்ளிட்ட சமகால பிரச்சினைகள் பற்றியும், அத்தியாவசிய தேவைகள் பற்றியும் தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.
பரம்பரை வழித்தோன்றலாக தமக்கு இருபது முப்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சி உரித்துடைய காணிகளுக்கு இன்றுவரை உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என்றும், காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமையால் யுத்தத்துக்குப்பின்னர் தமக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டத்தையும் இழந்து வாழ்க்கை முழுவதும் வீடே இல்லாமல் நாதியற்றவர்களாக்கப்பட்டுள்ளதாகவும்.
வீட்டுத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் தாம் யுத்தத்துக்குப்பின்னர் பெரும் கஸ்டப்பட்டு உழைத்து சிறுகச்சிறுக சேமித்த பணத்தையும்இ தம்மிடமிருந்த தங்க ஆபரணங்களை அடகு வைத்தும்இ கடன் பட்டுமே வீட்டுத்திட்டத்தை கட்டி முடிக்க முயன்றும் முடியாமல் போய் விட்டதாகவும்இ வீட்டுத்திட்டம் தங்களை கடனாளியாக்கியுள்ளதாகவும்.
வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணல் கருங்கற்களை இலகுவாக பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தூர இடங்களிலிருந்தே மணல் மற்றும் கருங்கற்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுவதால் மணல் கொள்வனவு பெறுமதிக்கும் மேலதிகமாக பயண வழித்தூரத்துக்கும் பணம் கொடுத்தே மணல் கருங்கற்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டியுள்ளதாகவும்,
வீட்டுத்திட்ட மதிப்பீட்டாளர்களும் கண்காணிப்பாளர்களும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தமது வீடுகளை வந்து பார்வையிட்டு விட்டு பௌதீக சூழல் பிரச்சினைகளையும்இ வளப்பற்றாக்குறைகளையும் கவனத்தில் கொள்ளாமல் வீட்டுத்திட்டத்தை ஏன் இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்று அழுத்தம் கொடுப்பதாகவும்இ குறை வேலைகளை முடிக்காமல் வீட்டுத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக பணத்தை பெற்றுக்கொள்ள முடியாதென நெருக்குவதாகவும்,
தமது பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக மின்சார சபையினர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுத்து விட்டதாகவும்இ ஆனால் மின்சாரம் தமது வீடுகளுக்கு வழங்கப்படாமல் தமது கிராமத்தை ஊடறுத்து காடுகளிலுள்ள இராணுவ முகாம்களுக்கும், பயிற்சி தளங்களுக்குமே கொண்டு செல்லப்படுவதாகவும்,
தமது கிராமங்களுக்கு பேரூந்து வசதிகள் செய்து தரப்படாமையால் வைத்தியசாலைஇ கச்சேரி போன்றவற்றுக்கு சென்று உரிய கால நேரத்துக்கு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தாம் பெரிதும் சிரமப்படுவதாகவும்இ 8-10 கிலோமீற்றர்களுக்கு மேல் கால்நடையாக சென்று பிரதான வீதியில் வைத்தே போக்குவரத்து சேவையை பெற்றுக்கொள்ள முடிவதாகவும்,
எவ்வித ஆதாரமுமின்றி மீளக்குடியேறி தொழில் தேடி சுயமாக உழைப்பதற்கு முன்பே நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் உணவுக்கு பெரும் கஸ்டப்படுவதாகவும்இ எங்கும் தொழில் இல்லாத நிலைமைகளால் வறுமை நிலைக்குள் அகப்பட்டுள்ளதாகவும் உலர் உணவு உள்ளிட்ட முக்கிய நிவாரண பொருள்கள் தமக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும்,
வேலை வாய்ப்புகள்இ தொழில்கள் இல்லாமையால் தம் பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளை செய்ய முடியாதுள்ளதால் அவர்கள் கற்றலிலிருந்து இடை விலகும் பாதகம் ஏற்பட்டுள்ளதாகவும்இ உயர்கல்விக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்ந்தும் கற்றலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும்இ வயோதிபர்கள்இ அங்கவீனமுற்றவர்கள்இ விசேட தேவைக்குட்பட்டோர் உள்ள குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாகவும்,
தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியையடுத்து கிணறுகளில் நீர்
வற்றியுள்ளதால் நீரைப்பெறுவதற்கு அலைந்து திரிவதாகவும்இ 50–60 அடிகள் ஆழத்துக்கு அப்பாலும் நீரை காண முடியாதுள்ளதாகவும்இ குழாய் கிணறுகள் தோண்டுவதற்கு தம்மிடம் பணவசதி இல்லையெனவும்இ சில இடங்களில் பிரதேசபையால் குடிப்பதற்கு மட்டும் நீர் வழங்கப்பட்டாலும் அந்த நீர் போதுமானதாக தரப்படவில்லை எனவும்,
பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டவர்களும்இ விதவைப்பெண்களும் சிறு சிறு குழுக்களாக இணைந்து சுயதொழிலில் ஈடுபடுவதற்கேற்ப தம்மால் தெரிவு செய்யப்;பட்டுள்ள தையல்இ தோல் பொருள்கள் உற்பத்திஇ தும்பு வேலைகள்இ பனம் பொருள்கள் உற்பத்திஇ கருவாடு பதனிடல் போன்ற தொழில்களுக்கு ஆரம்ப நிதியை தந்துதவினால் பின்னர் தமது உற்பத்தி பொருள் விற்பனை மூலம் கிடைக்கின்ற வருவாயில் சேமிப்பை செய்து சுழற்சி முறையில் தாம் தமக்குள் கடன்களை வழங்கிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர்.
மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள்இ அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேசி மிக விரைவாக தீர்வை பெற்றுத்தருவதாகவும்இ அவசர தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும்இ சுயதொழில் ஊக்குவிப்புகளுக்கு தம்மால் முடிந்தளவு வரையான உதவிகளை செய்வதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் மக்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

No comments:
Post a Comment