தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய்
எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில்
எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே
எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர்
இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. அன்னை பூபதி
(நவம்பர் 3, 1932 – ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி
காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்.
சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த
தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த
நிகரில்லாத் தாய் !
அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும், அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் தூக்கிப் போட்டது.
அன்னை பூபதி கண்களை மூட, தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.
அன்னை பூபதி அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம் மிகவும் சிறப்பாக யேர்மனி Frankfurt நகரில் நடைபெற்றது .
வணக்க நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றி, மலர்வணக்கம் ,அகவணக்கம் செலுத்தப்பட்டது .நிகழ்வில் விடுதலை பாடல்களுக்கான இளையோர்களின் நடனங்கள் , கவிதைகள் , நாடகம் என மிக சிறப்பாக நடைபெற்றது .
மாவீரர்களுக்கான வணக்கத்தோடு நாம் நில்லாமல் அவர்கள் எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அந்த உயரிய இலட்சியத்துக்காக நாம் அனைவரும் தொடர்ந்தும் போராட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க ,தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என முழக்கமிட்டு வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது .

No comments:
Post a Comment