யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியதாக குற்றஞ்சாட்டி கைதானவர்கள் திட்டமிட்டு சிக்க
வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அரச பங்காளியான நபரொருவருடனான முரண்பாட்டிலேயே அவர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. புலம்பெயர் தேசமொன்றினிலிருந்து வருகை தந்து பல சிறுமிகளது வாழ்வை நாசமாக்கி வரும் கோத்தாவின் சக பாடியான நபருடனான முரண்பாட்டிலேயே அவர்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கைதான இரு இளைஞர்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாதக்குற்றத் தடுப்புப்பிரிவினருக்கு மாற்றப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் தெரிவித்துள்ளனர். யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் 'தமிழீழம் மலரும்' என்ற தலைப்பில் அநாமதேய துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார் என்று குற்றச்சாட்டியே யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24), இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (24) ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரினால் வியாழக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டிருந்தனர்;. இந்நிலையில் குறித்த விடயத்தின் மேலதிக விசாரணைகளை பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொள்ளும் பொருட்டு குறித்த இருவரும் ரி.ஐ.டி யினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment