கிளிநொச்சி விவசாயச் செய்கைக்குப் போதிய நீரின்மை காணப்படுகின்ற
போதிலும் இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்ல எடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தரப்பில் உண்ணா நிலைப் போராட்டத்திற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மக்களுக்கும் கிளிநொச்சி மக்களுக்கும் இடையில் பிணக்கினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அரச வானொலியில் கிளிநொச்சி விவசாயிகள் தொடர்ந்தும் தேசத் துரோகிளாக சித்திரிக்கப்பட்டு விளம்பரங்கள் இடம்பெற்றுவருகின்றமையைக் கண்டித்தும், நீர் வழங்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்தும் விவசாயிகள் இப் போராட்டத்தினை நடத்தத் தீர்மானித்துள்ளதாக இரணைமடு விவசாயச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் குறித்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment