வடபுலத்தினில் மீண்டும் முனைப்பு பெற்றிருக்கும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சித்தாக்குதல்கள் தொடர்பினில் யாழ்.ஊடக
அமையம் தனது வன்மையான கண்டனத்தையும் கவலையினையும் தெரிவித்துக்கொள்கின்றது. இறுதியாக ஜெனீவாவினில் ஜ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரினில் இலங்கையினில் ஊடகசுதந்திரத்தை பாதுகாப்பது பற்றி சர்வதேசம் பிரஸ்தாபித்திருந்த போதும் அண்மைய சம்பவங்கள் அத தொடர்பினில் அரசு அக்கறை கொள்ளவில்லையோவென்ற சந்தேகத்தினையே எமக்கு ஏற்படுத்துகின்றது.
இத்தகையதொரு சூழலினில் வலம்புரி மற்றும் தினக்குரல் வீரகேசரி பத்திரிகைகளின் வடமராட்சி பிரதேச செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் கொலை முயற்சி தாக்குதலொன்றினில் உயிர் தப்பியுள்ளார்.அவருக்கு தொடர்ச்சியாக இருந்து வந்த அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் பற்றி அவர் தானுமொரு அங்கத்துவனென்ற வகையினில் யாழ்.ஊடக அமையத்தினிலும் சக ஊடகவியலாளர்களிடமும் பகிர்ந்தே வந்துள்ளார்.அண்மையிலும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தினிலிருந்து தனது தனிப்பட்ட தகவல்கள் கோரிப்பெறப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே மன்னாரிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் பிராந்திய பத்திரிகையான புதியவன் ஆசிரிய பீடத்திற்கு அரச ஆதரவு தரப்புக்கள் விடுத்த கொலை மிரட்டல் மற்றும் வன்னி உட்பட பரவலாக பிரதேச செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமை என்பவை வடபுலத்தினில் ஊடக சுதந்திரத்தை முடக்கி வைக்க மேற்கொள்ளப்படும் சதிகளேயென நாம் சந்தேகிக்கின்றோம்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தினில் இடமபெற்ற ஊடகவியலாளர்கள் மயில்வாகனம் நிமலராஜன்(பிபிசி) செல்வராசா ரஜிவர்மன்(உதயன்) மற்றும் பரநிரூபசிங்கம் தேவகுமார்(சக்தி) மற்றும் தினக்குரல் உதயன் நாளிதழ்களது ஊடகப்பணியாளர்கள் கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் பல வருடக்கணக்காக முடக்க நிலையிலேயே நீதிமன்றங்களினில் உள்ளன.அதே போன்று காணாமல் போன ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் பற்றியும் இன்று வரை தகவல்கள் இல்லாதேயுள்ளது.
இத்தகைய சூழலினில் தற்போது ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான கொலை முயற்சி தொடர்பினில் பக்கசார்பற்ற நீதி விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை அரசினை வேண்டிநிற்பதுடன் தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பினில் உலகளாவிய ஊடக அமைப்புக்களின் கவனத்தை ஈர்க்க நாம் பாடுபடுவோமென்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்;.

No comments:
Post a Comment