யாழ் திருவிழாவில் தேர் சரிந்ததால் பக்தர்கள் பெரும் பதற்றம்..
யாழ்ப்பாணம் கலட்டி பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழாவின்
தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது. இதன்போது தேர் ஆலயப் பின் வீதியில் வலம் வந்து கொண்டிருக்கும் போது சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் பக்தர்கள் பெரும் பதற்றம் அடைந்ததுடன் இது அபசகுணமோ என்று அச்சமடைந்தனர். குருக்கள் சிறு காயமடைந்தார். தேர் அடித்தட்டு பிரிந்தமையே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment