April 15, 2014

மட்டு வங்கிக்கு பணம் எடுக்கச் சென்ற பெண் மாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார்
வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
செட்டிபாளையம் பிரதான வீதியை சேர்ந்த சிவலிங்கம் வைஸ்ணவி (21வயது) என்ற இளம்பெண் மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.


குறித்த பெண் குறித்த வங்கிக்குசென்று பணத்தினை மீள எடுத்துக்கொண்டு சென்றுள்ள நிலையிலும் இதுவரையில் குறித்த பெண் இதுவரையில் வீடு வந்துசேரவில்லையென பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.Batt-W

No comments:

Post a Comment