April 12, 2014

கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐ.நாவில் கேள்வி!

கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் நிவ்யோர்க் தலைமையக செய்தியாளர் சந்திப்பில் வைத்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

 
எனினும் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று, ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.  
எனினும் இலங்கை தாம் பொறுப்புக் கூற வேண்டியங்கள் விடயங்களில் இருந்து விலக முடியாது என்பதில் பொது செயலாளர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதரகத்துக்கு முன்னால் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச மன்னிப்பு சபையின் அதிகாரிகளால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக, இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ள 
திருகோணமலையில் இடம்பெற்ற படுகொலை போன்ற விடயங்களுக்கு விளக்கம் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment