August 7, 2016

தமிழர்கள் ஒதுக்கப்பட்டதால் தான் இளைஞர்கள் ஆயுதமேந்தினர்! - மனோகரி செல்லத்துரை !

கடந்த காலத்தில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டமையினாலேயே இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடத்தொடங்கினர் என்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் ஆவண பொறுப்பாளர் மனோகரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் ஜந்தாவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த காலத்தில் நாட்டில் உருவாக்கப்பட்ட விகிதாசார ரீதியிலான தரப்படுத்தல்கள் குறிப்பாக கல்வியில் மேற்கொள்ளப்பட்டமையினால் பல தமிழ் இளைஞர்கள் நன்றாக படித்திருந்தும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்பட்டனர். இத்தகைய நிலமைகளாலேயே அவர்கள் ஆயுமேந்தி போராட ஆரம்பித்தனர்.

வடக்கில் உள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனெனில் இராணுவமே இங்குள்ள இளைஞர் யுவதிகளது எதிர்காலத்தை பாழாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் தான் தமது பிள்ளைகளை தாமே சுதந்திரமாக வளர்க்க முடியாது. வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கின்றார்கள். எனவே இராணுவமானது உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment