August 16, 2016

சிறுவர் துஷ்பிரயோகத்தில் யாழ், மட்டு, கிளிநொச்சி மாவட்டங்கள் முன்னணியில்!

கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகம் இடம்பெற்ற மாவட்டங்களாக கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன. சாய்ந்தமருது சமூக வைத்திய நிலைய வைத்தியர் எம்.ஜே.எம்.ஹஸ்ஸான், இந்தத் தகவலை வெளியிடடுள்ளார்.


 
'சிறுவர்களைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய ரிலீப் மற்றும் எம்.எப்.சி.டி முஸ்லிம் அமைப்பு நிறுவனங்களினால் நடத்தப்படும் ஆதரவற்ற பிள்ளைகளின் தாய்மார்களுக்கான கருத்தரங்கு, அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 'நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு 10,732 முறைப்பாடுகளும் 2014ஆம் ஆண்டில் 10,315 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

'இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் நோக்கில் பல திட்டங்களை முன்வைத்து இன்றைய அரசாங்கமும், இஸ்லாமிய ரிலீப் மற்றும் எம்.எப்.சி.டி ஆகிய அமைப்புகளும் பல திட்டங்களை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பல கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன. 'சிறுவர்களின் தாய்மார்களுக்கு துஷ்பிரயோகம் தொடர்பான தெளிவூட்டலை வழங்குவதன் மூலம் இவ்வாறான துஷ்பிரயோங்களைக் குறைக்க முடியும். சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைககளை நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதுதான் இக் குற்றங்கள் குறைவடையச் சாத்தியம் இருக்கின்றது' என்றார்.

No comments:

Post a Comment