August 7, 2016

அரசியல் கைதிகளை விடுவிக்காத அரசாங்கம் காணாமல் போனோரை எவ்வாறு கண்டுபிடிக்கும்?

உயிருடன் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத அரசாங்கம், எவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்போகின்றது என அரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், (சனிக்கிழமை) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியனார். இதன்போதே, அரசியல் கைதிகள் மேற்குறித்தவாறு கேள்வி எழுப்பினர்.

இக் கலந்துரையாடலின்போது, கடந்த காலத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென சுட்டிக்காட்டிய தமிழ் அரசியல் கைதிகள், திட்டமிட்டவாறு நாளைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார். இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காதவிடத்து, பாரிய அளவிலான போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தாம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடி, இப்பிரச்சினை குறித்து தெளிவுபடுத்தி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக செல்வம் அடைக்கலநாதன் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment