August 7, 2016

இரசாயண மருந்துமுன்னாள் போராளிகள் குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன!

முன்னாள் போராளிகளுக்கு இரசாயண மருந்து ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் போராளிகளின் தகவல்கள் வட மாகாண சுகாதார அமைச்சினால் சேகரிக்கப்படுவதாக, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இரசாயண மருந்து ஏற்றப்பட்டதனால் தான், முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டு, சடுதியாக உயிரிழப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த குற்றச்சாட்டுக்களை அரசாங்க தரப்பு நிராரித்த போதிலும், நேற்றையதினமும் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைகின்றன என, முதலமைச்சரிடம் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், முற்றிலும் தெரியாமல் தகவல்களை கூறுவது தவறானது. முன்னாள் போராளிகளின் விடயத்தினை அரசாங்கம் நிராகரித்து வருகின்றது.

அந்த வகையில், முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. முன்னாள் போராளிகள் எப்போது இணைந்து கொண்டார்கள். எவ்வளவு காலம் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டார்கள் என்ன நடந்தது என்பது குறித்து வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றார்கள்.

உடனடியாக எந்த கருத்துக்களையும் கூற முடியாமல் இருக்கின்றது. அவ்வாறு நடந்திருந்தால் மிகப் பாரதூரமான விடயம். இந்த விடயத்தினை சர்வதேச மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கு இருக்கின்றது.

அந்தப் பிரச்சினைக்குரிய அடிப்படைகளை ஆராய வேண்டிய சூழ்நிலையும் தற்போது எழுந்துள்ளதனால், தீர்க்கமான கருத்துக்களை தர முடியாமல் இருப்பதாகவும் முதலமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment