ரெலோ அமைப்பில் இருந்து கருத்துமுரண்பாடுகளால் பிரிந்து சென்றவர்கள் ‘சிறி ரெலோ’ என்ற பெயரில் தனித்து இயங்கிவருவது யாவரும் அறிந்த செய்தியாகும்.
இந்நிலையில் இவர்களைப் பயன்படுத்தி தமிழகத்தை மையமாக வைத்து சிங்கள உளவுத்துறை சதிச்செயலில் இறங்கியுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் வசித்துவரும் சிறிசபாரத்தினத்தின் சகோதரரான கந்தா இலங்கையில் இருக்கும் வின்சன் போன்றவர்கள் இந்தச் சதித்திட்டத்தை நேரடியாக இயக்கிவருகின்றனர். லண்டனில் உள்ள முன்னால் ரெலோ இயக்க உறுப்பினர்கள் பலரும் இதன் பின்னணியில் செயற்பட்டுவருகின்றனர்.
போரால் சீரழிந்து போயுள்ள தமிழர் பகுதிகளை மீளவும் கட்டியெழுப்புதல் என்ற பெயரில் ஒருபக்கம் முயற்சிகளில் இறங்குவதாக காட்டிக்கொள்ளும் இவர்கள் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் இளைஞர்களை குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் ஆதரவாக இருந்தவர்களை மீண்டுமொரு ஆயுதப்போராட்டத்தின் பெயரால் உள்வாங்கும் சதிச்செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை தொடர்புகொள்ளும் இவர்கள், உலகநாடுகள் ஒருபோதும் எமக்கு நீதியை வழங்கப்போவதில்லை, சிங்கள அரசும் எமக்கு உரிய தீர்வைத் தரப்போவதில்லை அதனால் மீண்டும் ஆயுதவழியில் நாம் போராடியே ஆகவேண்டும் என்று கூறி அவர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த சிலரும் தெரிந்தோ தெரியாமலோ இவர்களின் வலையில் விழுந்துள்ளனர். அவர்களை வைத்தே ஆட்களை இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
காந்தா மற்றும் வின்சன் தலைமையில் சென்னையில் அடிக்கடி கூடி இரகசியமாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றனர். தமிழகத்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு இவர்களால் ஆபத்து நேரும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.
இவர்களின் பின்னணியில் சிங்கள உளவுத்துறையே இருந்து இயக்கிவருகின்றது. புனருத்தாணம் என்ற பெயரில் தாயகத்தில் கால்பதித்து தம்மை நிலைப்படுத்தும் முயற்சிகள் வெளிப்படையாக நடைபெற்று வருகையில் தமது சதிவலையில் சிக்கும் புலிகளையோ அல்லது ஆதரவாளர்களையோ களமிறக்கி வன்செயல்களில் ஈடுபடுத்தும் முயற்சிகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அனைத்துலக சமூகத்தின் விருப்பத்திற்கு பாத்திரமாக விளங்கிவருகின்ற போதிலும் குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது நிறைவேற்றும் நெருக்கடியில் இருக்கும் இன்றைய சிறிலங்கா அரசு அதையும் தட்டிக்களித்துவிடவே இந்த சதிச்செயலை திட்டமிட்டுள்ளது.
மீண்டும் இலங்கையில் தாக்குதல்களைத் தொடங்குவதன் மூலம் புலிகள் மீது பழியை சுமத்தி அனைத்துலக அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதே இச்சதிச்செயலின் நோக்கமாகும்.
சுதந்திர தமிழீழத்திற்கான போராட்டம் முடிந்துபோய்விடவில்லை. போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறாது என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய எமது விடுதலைப் போராட்டம் அனைத்துலக ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தாயக விடுதலைக்காக தமதுயிரை கொடையாக்கி விதையாகிப்போன மாவீரர்களின் இலட்சியக் கனவு நனவாவது உறுதி. இடையில் புலிவேசம் காட்டிவரும் குள்ளநரிகளின் சதிவலையில் வீழ்ந்துவிடாது இலட்சிய உறுதியுடன் விழிப்பாக இருக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

No comments:
Post a Comment