August 23, 2016

தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் நல்லாட்சியிலும் தீவிரம் – அரியநேந்திரன்!

தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் வரலாற்றை முழுமையாக மாற்றியமைக்கும் சதி நடவடிக்கைகள் நல்லாட்சி என கூறிக்கொள்ளும் தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்திலும் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் தமது வரலாற்றை மறந்துவிடுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு – அம்பிலாந்துறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அம்பிலாந்துறை எனும் வரலாற்று நூல் வெளியீடு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் வரலாற்று ரீதியான, மரபு ரீதியான விழுமியங்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், நல்லாட்சி காலத்தில்கூட தமிழர் நிலம் பறிபோய்க்கொண்டிருப்பதாக கவலை வெளியிட்டார்.

No comments:

Post a Comment