மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களை, பங்குகளாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.
சீனாவின் சட்டங்களின் படி, இது சாத்தியமற்றது என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
வர்த்தக விதிமுறைகளுக்கு அமைய, முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியே இதுபற்றி தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்திலேயே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனத் தூதுவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் சீனத் தூதுவரும் பங்கேற்றிருந்தார்.
எனினும், இந்த விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தமது நாடு விரும்புவதாகவும், சிறிலங்கா தற்போது எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆதரவளிப்பதாகவும், சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment