August 24, 2016

திருகோணமலை- ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் வான் மோதி மருத்துவ மாது மரணம்!

திருகோணமலை- ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில், மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் சென்ற மருத்துவமாது உயிரிழந்தார் என, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த எஸ்.சந்தான லக்ஸ்மி (வயது 46) எனத் தெரியவந்துள்ளது.

 
விபத்துடன் தொடர்புடைய வான் சாரதியைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment