ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதா, இல்லையா என்பது தொடர்பாக கட்சியின் கடைமட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிரதான விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கலந்துகொள்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்காக கொழும்பில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, இன்றைய கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
“அடுத்த நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் சுதந்திரக் கட்சியின் 64 ஆண்டு விழா தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடைமட்ட தொகுதிகளிலுள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த நிகழ்வில் கலந்துகொள்வது பற்றிய முடிவு எடுக்கப்படும்” – என்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிகழ்வில் கலந்துகொள்ளாமல் மஹிந்த ராஜபக்ச வெளிநாடு செல்வார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கூறியிருக்கும் விடயம் பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, “வெளிநாடு செல்வதற்கு முன்னதாக எமது முடிவு அறிவிக்கப்படும். கட்சியின் நிறைவாண்டு நடத்தப்படும் என்ற அறிவித்தலுக்கு முன்னதாகவே வெளிநாடு விஜயத்திற்கான தீர்மானத்தை எடுத்திருந்தேன். சர்வதேச சம்மேளனம் ஒன்றில் கலந்துகொள்ளவே செல்கிறேன். இவ்வாறு சர்வதேச சம்மேளனத்திற்குச் செல்லும் போது கட்சியின் நிறைவாண்டு நடத்தப்படும் என்பதற்காக உடனடியாக இரத்து செய்ய முடியுமா? - என்றார்.

No comments:
Post a Comment