இலங்கையை சேர்ந்த தியாகராஜன் (வயது 45) என்பவர், அவரது மனைவி மேகலா (வயது 42)வுடன் கடந்த ஏழு ஆண்டுக்கு முன் இலங்கையிலிருந்து வீசா மூலம் திருச்சி வந்துள்ளார்.
அங்கிருந்து திருப்பூர் சென்ற அவர்கள், நெருப்பெரிச்சல் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
போலி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நோக்குடன் கோவையில் பிறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளனர். அதன் மூலம் கடவுச்சீட்டு பெற்றுள்ளார்.
இச்சூழலில், தியாகராஜன், கடந்த ஏப்ரல் 16ம் திகதி இலங்கை செல்ல, மதுரை விமானநிலையம் சென்றுள்ளார்.
இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையில் போலி முகவரி கொடுத்து கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.
இது குறித்து, அனுப்பர்பாளையம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததுடன், வழக்கு பதிவு செய்துள்ளனர்,
இந்தநிலையில் தலைமறைவான இலங்கைத் தமிழரான தியாகராஜன் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்

No comments:
Post a Comment