August 1, 2016

காணாமல் போனவர்களுக்கான விசாரணை செயலகம் சுயாதீனமானது!

காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நிறுவப்படவுள்ள விசாரணை செயலகம் சுயாதீனமானது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நிறுவப்படவுள்ள காணாமல் போனவர்களுக்கான செயலகம் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக செயற்படும் அதிகாரம் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சரும், போர்க்குற்றங்கள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடுகளை தெரிவிக்கும் அதிகாரம் கொண்டவருமான அமைச்சர் மங்கள சமரவீர இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களுக்கான செயலகம் இலங்கையின் சட்டவாக்க அதிகாரத்துக்கு உட்பட்ட நிறுவனம் அல்லவென்று குறித்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியன கொண்டு வந்த பிரேரணைக்கு அமையவே காணாமல் போனவர்களுக்கான செயலகம் நிறுவப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த கட்டமைப்பு சுயாதீனமான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment