August 20, 2016

பௌத்த சின்னங்கள் அமைப்பது தொடர்பில் ஆணையிறவில் இருந்து யு.என்.எச்.சீ.ஆர் வரையில் நடைபவணி!

இரணைமடு ஆலய சூழலில் புத்த விகாரை அமைப்பது மற்றும் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்கள் அமைப்பது உள்ளிட்டவற்றினைக் கண்டித்து மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் இணைந்து நாளை மறுதினம் ஆணையிறவில் இருந்து யு.என்.எச்.சீ.ஆர் வரையில் நடைபவணி இடம்பெறவுள்ளது.


இது தொடர்பில் மாவட்ட பொது அமைப்புகள் தகவல் தருகையில் ,

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு கனகாம்பிகை அம்மன்  ஆலய சூழலில் புத்த விகாரை அமைப்பது மற்றும் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்கள் அமைப்பது உள்ளிட்டவற்றினைக் கண்டித்து மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் இணைந்து நாளை மறுதினம் திங்கட் கிழமை ஆணையிறவில் இருந்து புறப்பட்டு  யு.என்.எச்.சீ.ஆர் வரையில் ஓர் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேரணியில் மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் நிறுவனங்கள் அனைத்தும் பங்கு கொள்வது தொடர்பில் இன்றைய தினம் ( நேற்று ) கூடி ஆராய்ந்தோம்.

இதன் பிரகாரம் குறித்த பேரணியானது ஆணையிறவில் இருந்து புறப்பட்டு கிளிநொச்சியில் அமைந்துள்ள யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு வாழும் மக்களின் மனதைப் புண்படுத்தி நல்லிணக்கத்திற்கு குந்தகமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களைக் கண்டித்தும் இவற்றினை உடனடியாக நிறுத்தக் கோரியுமே மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பௌத்தர்களே இல்லாத பிரதேசத்தில் அமைக்கப்படும் இவ் விகாரைகளை தமிழ் மக்கள் மற்றுமோர் ஆக்கிரமிப்புச் சின்னமாகவே கருதுவதனாலும்.

இவ் விகாரையின் மத வழிபாட்டுக்குரியவர்கள் இன்மையால் தனித்து விடப்படும் இவ் விகாரைகளின் புனிதம் கூட எதிர்காலத்தில் கேள்வியாகும் நிலையுள்ளதனால் இவ்வாறான செயல்களைத் நிறுத்துமாறு கோரியே மேற்படி பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment