August 20, 2016

வவுனியா மாவட்டத்தில் கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த கலாச்சார மண்டபம்உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த கலாச்சார மண்டபம் 24ம் திகதி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,

வவுனியா மாவட்டத்தில் குடியிருப்பு பிரதேசத்தில்   கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசம் முகாமாகவிருந்த  கலாச்சார மண்டபம் எதிர் வரும்  24ம் திகதி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவத்தினரால்  மாவட்டச் செயலகத்திற்கு உத்தியோக பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் படையினர் வசமுள்ள நிலங்களில் விடுவிக்கப்படக் கூடிய நிலங்கள் தொடர்பில் கடந்த சனிக்கிழமை வவுனியா மாவட்ட இராணுவத் தலமையகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதன்போது குறித்த கலாச்சார மண்டபம் , செட்டிகுளம் மெனிக்பாம் முகாம் பகுதி உள்ளிட்ட நிலங்களை அரச அதிபரிடம் ஒப்படைக்க படையினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இதன் பிரகாரம் கலாச்சார மண்டபம் 24ம் திகதி புதன் கிழமை கையளிக்கவுள்ளதாக படையினரால் தற்போது மாவட்ட அரச அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கையளிப்பின் 26 ஆண்டுகளின் பின்பு குறித்த மண்டபம் மீண்டும் நகரசபையினர் கட்டுப்பாட்டில் இயங்கும் நிலை ஏற்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு நன்மை பயக்கும் எனத் தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment