August 4, 2015

கொழும்பில் முக்கிய நகர்வு.! அடுத்த கட்டம்?

பொதுத் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரியவந்துள்ள நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்பார்த்தது போல், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களை கைப்பற்றினால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றினால், சுசில் பிரேமஜயந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரியவந்துள்ள நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்பார்த்தது போல், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களை கைப்பற்றினால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றினால், சுசில் பிரேமஜயந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் துணைப் பிரதமர் பதவி இரண்டாவது பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றும் கட்சிக்கு வழங்கப்படும். தேசிய அரசாங்கத்தில் 45 பேரை கொண்ட அமைச்சரவையில் உள்ளடக்கப்பட வேண்டிய இருத்தரப்பையும் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் சிலரது அமைச்சு பொறுப்புகள் மாற்றப்படவுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சில முக்கியஸ்தர்களின் அமைச்சுக்களும் அடங்கும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த பலர் அமைச்சுப் பதவிகளை பெறவுள்ளதுடன் முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளன.

No comments:

Post a Comment