April 5, 2015

04.04.2015 அன்று யேர்மனியில் நடுகல் வணக்கநாள் நினைவு கூரப்பட்டது ( படங்கள் இணைப்பு)!

மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கல் வரை இடம்பெற்ற இறுதிப்போரிலே வீரகாவியம் படைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தளபதிகள், போராளிகளின் நினைவாக நடுகல் வணக்க நாள்  04.04.2015 அன்று யேர்மனி நொயிஸ் நகரிலே நினைவுகூரப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பமாக  பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி கொடிப்பண் இசைக்கப்பட்டு  ஏற்றிவைக்கப்பட்டதுடன் தமிழின விடிவிற்காக தம்மை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஈகச்சுடர்   ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நடுகல் நாயகர்களின் நினைவை நெஞ்சிலே சுமந்து அவர்களுக்கு மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
 
 
நிகழ்வில் இளஞ்சூரியன் இசைக்குழுவினர் விடுதலைகானங்களை இசைக்க, யேர்மனி கலை பண்பாட்டு கழக மாணவர்கள் விடுதலை நடனங்களை வழங்கி நிகழ்வைச் சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியாக தேசியக்கொடி இறக்கி வைக்கப்பட்டு  நிகழ்வு நிறைவுபெற்றது.
 
 
 



 




































No comments:

Post a Comment