இலங்கையின் படையினர், வடக்கு கிழக்கில், அரச மரங்களுக்கு கீழே புத்தர் சிலைகளை வைப்பதும் பௌத்த விகாரைகளை அமைப்பதும் அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஊடகம் ஒன்றுக்கு இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளை தோற்கடித்ததன் பின்னர் படையினர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது நல்லத்தை கொண்டு வருவதைக்காட்டிலும், தீயவிளைவையே கொடுக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பாதுகாப்பு படையினர் இந்த செயல்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என தாம் பலத்தடவைகளாக ஜனாதிபதியிடம் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி தனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment