August 10, 2016

வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் மீளாய்வு!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி
பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி,பிரதேச மக்கள் இன்று (புதன்கிழமை) மீண்டும் குறித்த பகுதிகளில் உள்ள இராணுவ அதிகாரியினைச்  சந்திக்க சென்றிருந்தனர் சென்றிருந்த  மக்களை சிறுது நேரத்தில் வருவார் என    காக்க வைக்கப்பட்டதனை அடுத்து  இராணுவ  மேயர்  வெளியில் கலந்துரையாடல்  ஒன்றிற்கு சென்றிருப்பதாகக்  கூறி  நீண்ட  நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தனர்  குறித்த மேயர் வருகைதராததால்  மக்கள்  ஏமாற்றத்துடன் திருப்பப்பட்டனர்
மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றிகாணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்தார்.
எனினும்ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றைய தினம்  குறித்த  இராணுவ அதிகாரியினை  சந்திக்கச்சென்றிருந்தனர்
  .
பல வருட காலமாக வாடகை வீடுகளிலும்உறவினர் வீடுகளிலும் தங்கி பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கும் பரவிப்பாஞ்சான் மக்கள்இபபிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் அத்துடன்  மீண்டும்  ஒருகிழமைக்குள்  தமக்கு தீர்வு எட்டாவிட்டால்  வருகின்ற சனிக்கிழமையில் இருந்து தமது காணிகளை விடுவிக்கும்வரை முகாம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தெரிவிக்கின்றனர் .

No comments:

Post a Comment