July 28, 2016

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை!

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஜெனிவாவில் உள்ள Cointrin விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிசாருக்கு தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து, விமான நிலையத்திற்கு விரைந்த பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டதுடன், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு இருக்கிறதா? என சோதனை நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், வெடிகுண்டுகள் எதுவும் இல்லாத நிலையில் தங்களுக்கு வந்த அழைப்பு குறித்து விசாரணையை நடத்தியதில் அது போலியான எச்சரிக்கை தகவல் என தெரியவந்துள்ளது.

அத்துடன், விசாரணையில் பெண் ஒருவர், தனது கணவர் தன்னை தனியாகவிட்டு பயணம் செய்வதால் பொறாமை கொண்ட அவர், இவ்வாறு போலியான தகவலை பொலிசாருக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பயணிகள் மற்றும் பொலிசாரின் நேரத்தினை வீணடித்ததோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற போலியான தகவலை பரப்பி பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

வழக்கு விசாரணையில், இவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், 30,000 யூரோ அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த சோதனை நடவடிக்கையின் போது பயணிகள் அஞ்சமடைந்ததன் காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment