July 1, 2016

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு !

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாடு என்ற தொனிப்பொருளில் மாவட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தால் நீதிமன்றினால் கட்டளை இடப்பட்ட நபர்களுக்கான சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கு
நேற்று 29.06.2016 புதன் கிழமை அதிகாலை 10.00 மணியில் இருந்து பிற்பகல் 1.00 மணியளவில் வவுனியா சிறுவர் நன்னடத்தைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம். நஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு வளவாளர்களாக வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல மருத்துவ ஆலோசகர் னுச. எஸ். சுpவதாஸ், மாவட்ட மது வரித்திணைக்கள நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜீ.எஸ்.கே. செனவிரட்ண மற்றும் பரிசோதகர் எஸ். சுரேஸ், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். சுபாசினி, இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி எஸ்.எப். சிப்கா மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரனை உத்தியோகத்தர் ஆர்.எல். வசந்தராஜா ஆகியயோர் கருத்துரைகளை வழங்கினர்.

இங்கு போதைப் பொருளுக்கும் புகைத்தலுக்கும் அடிமையானவர்கள் குடும்பத்திற்கு மிகப் பெரிய அபாயகரமானவர்களாக காணப்படுவதாகவும் இதில் இருந்து விடுதலை பெற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் அதனை கையாளத் தெரியும் போது அதில் இருந்து விடுதலை பெற முடியும். போதையற்ற குடும்பம், கிராமம், நகரம் என விஸ்தரிக்கப்படல் வேண்டும் எனவும் பல்தேசிய கம்பனிகள் கொள்ளை இலாபங்களை அடைந்து கொள்வதற்கு சாதரன மக்களை குறி வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது தனது கருத்துரையை மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம். நஜீம் தெரிவித்து முதலில் மாற்றமே அவசியம் என கருத்துரை வழங்கி வருகை தந்த அனைத்து வளவாளர்களுக்கு நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.







No comments:

Post a Comment