July 14, 2016

இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் - மஹிந்த ராஜபக்ஸ!

இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கெழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதல்வர் நாமல் ராஜபக்ஸவை பார்வையிடச் சென்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரரிவித்துள்ளார்.

இதனை விடவும் பலம்பொருந்திய அரசாங்கங்கள் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட உள்ளதாக அமைச்சர்கள் முன் கூட்டியே எதிர்வு கூறியதாகவும் இது நாட்டின் இன்றைய சட்டம் ஒழுங்கு நிலையையும் நல்லாட்சியையும் பிரதிபலிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் புதல்வர் தொடர்பில் உரிய முறைப்பாடு செய்யாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு எந்தவொரு கூட்டு எதிர்க்கட்சி  அரசியல்வாதியும் அரசியலில் இருந்து ஒதுங்கி விட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment