மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது இனம் தெரியாத விசமிகளினால் கல்வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்தது.இதன் போது காலை 9 மணியளவில் ஆலயத்தின் மீது பாரிய கல் ஒன்றினால் இனம் தெரியாத விசமிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது ஆலயத்தின் ஓடு உடைந்து கல் ஆலயத்தினுள் விழுந்த போது திருப்பலியில் கலந்து கொண்டிருந்த சிறுமி ஒருவர் மீது கல் விழுந்து சிறுமி காயமடைந்தார்.
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
உடனடியாக குறித்த ஆலயத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸ்hர் சேதமடைந்த பகுதியை பார்வையிட்டனர்.
குறித்த கல்வீச்சுத்தாக்குதல் குறித்து அப்பகுதியில் விசாரனையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன் குறித்த ஆலயத்தில் மீது பல தடவைகள் இனம் தெரியாத விசமிகளினால் கல் வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மேற்கொண்ட விசாரனைகளின் போது பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment