July 18, 2016

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் – 1”

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் – 1” படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.



ஓயாத அலைகள் – 1 என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது.
இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன.

இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின் போது தரையிலும் கடலிலும் 320 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.
இவர்களில் முதல் நாள் 18.07.1996 அன்று 158 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

No comments:

Post a Comment