July 18, 2016

கிளிநொச்சியில் இலங்கை ; ஜேர்மன் பயிற்சி நிறுவனம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

இன்று 18-07-2016 காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அறிவியல்நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.


இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை (புஐணு) அமைப்பினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் செயற்படுத்தப்படும் தொழிற்பயிற்சி செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்  தொழிற் பயிற்சிகளை மேம்படுத்துவதனை  நோக்கமாக கொண்டு 2012 இல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

கிளிநொச்சி அறிவியல்நகரில் இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காணியில் நிறுவப்பட்டுள்ள இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின்  நிர்மாணப்பணிகள், சாதனங்கள்; வழங்கல், இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றுக்காக ஜேர்மன் அபிவிருத்தி வங்கி    8.4 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. ஜி.ஜ.இசட் ஊடாக தொழில்நுட்ப உதவிகளுக்காக மேலதிகமாக 8 மில்லியன் யூரோக்களை ஜேர்மன் பொருளாதார கூட்டாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சு வழங்கியிருக்கிறது.

தொழில்நுட்ப உதவிகள், நிர்வாக ஊழியர்களின் மற்றும்; பயிற்சியாளர்களின் திறன் அபிவிருத்தி ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் பொறுப்பை ஜி.ஜ.இசட் ஏற்றுள்ளது.

 இலங்கை – ஜேர்மனி பயிற்சி நிறுவனம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் இலங்கையின் சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் சமமான முறையில் சேவைகளை வழங்கும் தேசிய மட்ட பயிற்சி நிலையமாக செயற்படவுள்ளது

வாகன தொழில்நுட்பம், நிர்மாண தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தல் தொழில்நுட்பம், எந்திரவியல் பொறியியல் மற்றும் மின்சார மற்றும் மின் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உயர் தரம் வாய்ந்த தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் ஆங்கில மொழியில் சகல பயிற்சி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் 200 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி தகைமை (Nஏஞ) கட்டமைப்புக்கமைய Nஏஞ டுநஎநட 4 முதல் 6 வரையான பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்களை இதற்கு தயார்ப்படுத்துவதற்கு, தேசிய தொழிற்பயிற்சி தகைமை (Nஏஞ) 1 முதல் 3 வரை பயிற்சிகள் வழங்க 14 தொழிற்பயிற்சி நிலையங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் செய்மதி நிலையங்களாக இனங்காணப்பட்டுள்ளன. இந்த செய்மதி நிலையங்களில். க.பொ.த. சாதாரண தரம் க.பொ.த. உயர் தரம் மற்றும் Nஏஞ டுநஎநட 3 மற்றும்  4 தகைமைகளைக் கொண்டவர்கள்  இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில்  மேலதிக கற்கைகளை மேற்கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கள் கிழமை இடம்பெற்ற நிகழ்வில் எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன்,  திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி ஜெகான்மோகாட்,  பாராளமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், மஸ்தான், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட குரே, யாழ் இந்திய துணை தூதுவர் நடராஜா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள்  மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







No comments:

Post a Comment