July 25, 2016

காணாமல் போனோரின் உறவுகள் திரும்பிவரவேண்டி விசேட பூஜை வழிபாடும் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் போனோரின் உறவுகள் தமது உறவுகள் எங்கிருந்தாலும் எங்களிடம் நல்லபடியாக திரும்பிவரவேண்டும் என வேண்டி விசேட பூஜை வழிபாடும் கவனயீர்ப்பு போராட்டமும் திருக்கோவில் சகலைகலை அம்மன் கோவில் முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.


அம்பாறை மாவட்ட காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவி இ.செல்வராணி தலைமையில் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் காணாமல் போனோரின் சிறுபிள்ளைகள் கலந்துகொண்டு காணாமல்போன தமது உறவுகள் மீளவும் நல்லபடியாக திரும்பிவரவேண்டும் என பிராத்தனையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோவிலின் முன்றலில் ஓன்றுதிரண்ட காணாமல்போன உறவுகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டு நிற்பது என்வென்றால் காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கிருந்தாலும் தேடித்தரவேண்டிய கடமை இந்த அரசாங்கத்தின் கையிலுள்ளது எனவே அவர்களை தேடித்தருமாறும் கேட்டுக் கொள்வதுடன் ஜ.நாடுகள்சபையிடம் நாங்கள் கையேந்தி கேட்டோம் எங்கள் உறவுகளை தேடிதருமாறு அதற்கு அவர்கள் இதுவரை எதுவிதமான நடவடிக்கையு இன்றி அசமந்தபோகில் உள்ளனர் எனவே தயவு செய்து இலங்கை அரசு மற்றும் ஜ.நாவிடம் மன்றாடிக்கேட்பது எங்கள் உறவுகளை தேடி எங்கள் கைகளில் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோhம்.

அதேவேளை எங்கள் உறவுகள் எங்கிருந்தாலும் எங்;களிடம் மீண்டும் வரவேண்டும் என இந்த விசேட பூஜை வழிபாட்டில் கேட்டு பிராத்தித்துள்ளதாகவும்; இனிமேல் இலங்கையில் காணாமல் ஆக்கப்படமாட்டாது என்று அரசு ஜ.நாவிடம் கூறியது இதனை நிறைவேற்ற வேண்டும் ஒவ்வொரு காணாமல் போன உறவுகளின் காணாமல் போன நாளில் இருந்து அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் இலங்கை அரசு ஜ.நாவிற்கு கொடுத்த 4 கோரிக்கைகளையும் நிறைவேற்று காணாமல்போன உறவுகளுக்கு நடந்ததை என்னவென அரசு கூறவேண்டும் போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து கலைந்து சென்றனர்.






No comments:

Post a Comment