July 17, 2016

குறும்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விடுதலைப் புலிகள்!

புகழிட வாழ்வில் தமிழர் அடையாளத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களின் தனித்துவங்களைக் கலைகள் வழியாக நிலைநாட்ட முயலும் தமிழர் வாழும் பிரான்சில் “கலைச்சுடர் தீபன்”அறுபதுக்கு மேலான குறும்படங்களை உருவாக்கி அளித்த குறுபடங்கள் பேசப்படும் நிலையில் தமிழகத் திரைப்படக் கலைஞர்களை நடிக்க வைத்து எடுத்த”குடில்”குறும்படம் எதை நோக்கிப் பேசப்போகிறது.


விடுதலைப் புலிகள் குறும்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியதோடு கையாளப்பட வேண்டிய காரண காரியங்களை குறும்படத் தயாரிப்பாளர்க்கு வழிகாட்டியாகவும் உள்ளனர். அவர்கள் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடவும் மிகப் பொரியளவில் கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தனர்.

2006ம் ஆண்டில் நிதர்சனம் தயாரிப்பில் திரைப்படங்கள் சர்வதேசதரத்திற்குத் தந்திடவும் தொடங்கியிருந்தனர் காலம் எப்படியான கோலத்தில் முள்ளிவாய்க்காலின் பின்புநகர்கின்றது என்பது தெரிந்ததே. விடுதலைப் புலிகளின் காலத்தில்தான் வீழ்ந்து கிடந்தஈழத்துத் திரைப்படங்களும்-குறும்படங்களும்-விவரணச்சித்திரங்கள் மரபு சார்ந்த கூத்துக்கள் கலைகள் யாவும் ஈழத்து மண்ணில் புத்துயிர் பெற்றது.

புதியநெறிகள் நின்று பயிற்று வந்தவர்களும் பயிற்றுவிப்புகளும் தீவிரம் கண்டு சர்வதேச அரங்கிற்குள் நுழைந்தது. நமது தமிழ்க் கலையின் ஆளுமை ஆற்றி அறைந்து பறைசாற்றி எழுந்தது விடுதலைப் புலிகள் காலம்.

பிறர் நாட்டில் வாழும் கலைஞர்கள் குறிப்பாக இளைய தலைமுறைக் கலைஞர்கள் மேற்கொண்டுவரும் குறும்படங்கள் பேசும். நமது சொந்த மண்ணின் பிரச்சனைகள் சார்ந்த குறிப்பாக இனப்பிரச்சனை விடுதலை சார்ந்த அறிவும் கடப்பாடும் கட்டுப்பாட்டுடன் நிறையக் குறும்படங்கள் ஜதார்த்தத்தை எதிர்கொண்டு எடுத்திருக்கின்றன.

அகதிகள் அவலத்தைப் பற்றியசித்தரிப்புகள் தாயகத்தித்திலிருந்து வந்த இளைஞர்கள் படைப்பாளிகளின் பங்கிற்கு அகதிகள் பற்றிய உள்ளடக்கத்தை துணிவோடு கையாள்கின்றனர். விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் நேரடியாகப் பேசும் அடக்குமுறைத் தன்மை இனவழிப்புக் கொலைகள் விடுதலைப் புலிகள் பின்னரான தமிழ்த் தலைவர்களின் கபடநாடகம் இனவுணர்வற்ற போக்குகள் பிறர் நாடுகளில் வாழும் தமிழ்மக்ககளின் வாழ்வியல் போக்கின் தன்மைகள் என்பன குறும்படங்களில் இடம்பெற்று நெஞ்சில் பதிய வைத்து விடுகின்றன.

விடுதலைப் புலிகள் 260 க்குமேற்பட்ட குறும்படங்கள் தந்தனர் அத்தனையும் பிரமிப்பையும் சிறப்பினையும் தந்தன 1990 களில் நிதர்சனம் தயாரிப்பில் வெளிவந்த குறும்படங்கள் தாயக நிகழ்வுகளையும் கனவுகளை நேரடியாகத் தந்தகுறும்படங்கள். அவற்றின் தரத்திற்கேற்ப இதுவரைஎவரும் குறும்படங்கள் தரவில்லை.

தாயத்திலும் புகலிடங்களிலும் இருந்து வெளிவந்த படங்களில் ஈழத்தமிழர் பிரச்சனையின் உண்மைத் தன்மைகள் பதியப்பட்டனவா என்பதும் கேள்வியாகவே தொங்கி நிற்கின்றது. தென்னகத்திலிருந்து வந்த திரைப்படங்களில் கூட ஈழவிடுதலை அகதியானவர் பிரச்சனைகள் தெளிவாகவும் முழுமையாகயான உண்மைத் தன்மையுடன் பதியப்படவில்லை

புகலிடத்திலிருந்து வெளிவரும் குறும்படங்கள் பெருவாரியான குறும்படங்கள் எதை எதையெல்லாம் அள்ளிக்கொட்டிக் கொண்டிருக்கின்றனர். அவற்றில் சிலரின் குறும்படங்கள் கூறும் தகவல் சாத்தியங்கள் கூறும் தன்மைகள் கவணிக்கப்பட வேண்டும்.

வரலாற்று நிகழ்வுகளையும் அகதி வாழ்வின் ஜதார்தத்தையும் ஈழக்கலைஞர்கள் குறும்படங்கள் மூலம் பேசவைக்கின்றார்கள். உறவுகள் தொடர்புகளையும் உயிர் கொல்லப்பட்ட துயர்களையும் அகதி நிலையிலும் புகலிடத்தில் நாளுக்குநாள் நடைபெறும் பிரச்சனைகளையும் தருபவர்களாக ஈழத்தமிழ் கலைஞர்கள் குறும்படத் தயாரிப்பாளர்கள் விளங்குகின்றார்கள்.

அந்தவகையில் கலைச்சுடர் தீபன் தந்த அறுபதுகுறும் படங்களும் ஒப்பிட தற்போது வெளிவந்திருக்கும் இந்தியக் கலைஞர்கள்-காந்தசிறி.பாமா.சேகர் இந்தியத் திரைப்படங்கள் நடித்த குழந்தை நட்சத்திரம் பல திரைப்படங்களில் நடித்தவர் நடித்துக் கொண்டிருக்கும் “வைஸணவி இவர்களின் நடிப்பில் திறமையான முயற்சியில் “குடில்”குறும்படம் பேசுவது பராட்டுக்குரியதும். கற்பிதமான உடனடித்தாக்கம் நெஞ்சில் பதியும் படி தந்திருக்கும் குறும்படம் “குடில்”குறும்படம் என்பதும் என் பாரட்டுமாகும்.

தீபன் அவர்கள் பலகுறும்படங்களைத் தயாரித்து வழங்கியதுடன் இவர் பிரான்சில் வாழும் காலத்தில் பல தெலைக்காட்சி வானொலிகள் இணையத்தளங்கள் எனப் பணியாற்றியவர் பிரான்சில் குறும்படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் அதிக குறும்படங்களையும் தொடர்ந்து இடைவிடாது இக்கலைப் பணிக்காற்றும் கலைப்படைப்பாளி கலைச்சுடர் தீபன் அவர்கள்.

கலை காசாகி விட்ட காலத்தில் இணையத்தளங்கள் தொழில் நுட்பசாதனங்கள் பலரை இனம் காட்டி நிற்க உறுதுணையாக நிற்பதுடன, உபத்திரவத்தையும் அதிகம் விளைவிக் கின்றது. இந்தவகையில் குறுக்கிடவும் குளறுபடிபுரிதலும் நடப்பதைதடுக்க முடிவதில்லை. காரணம் ஒருவரின் செயலுக்கு இணையத்தளங்களும் முகநூல்களும் நல்லகலைஞனையும் நல்லகலைக் கண்ணோட்டத்தையும் அச்சுறுத்துகின்றது. கலையற்ற கஞ்சத்தனமான கருத்துக்களைக் கக்கிவிடுவதால் நல்லகலைக் கண்ணோட்டம் பாழ்பட நேர்வதையும் காணலாம்.

எடுத்தாளப்படும் விடயம் விபரமற்று வில்லங்கமாக இருந்தாலும் பலர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தங்கள் தளம். தங்கள் வித்தை .நான்தான் என்ர இஸ்டம்தான் என்ற இறுமாப்புக் கொண்டு ஒப்புக் கொள்ளாத குறும்பட இயக்குனர் பலரின் மத்தியில் கலைச்சுடர் தீபன் உண்மையும் கலையை வெளிப்படும்தும் தன்மையும் கொண்ட குறும்படங்கள் தந்துள்ளவர்.

கனவுத் தொழிற்சாலை என்று பலராலும் சிறப்பிக்கபடும் குறிப்பாகதிரைபடத் துறையின் அபார வளர்ச்சயின் வடிவத்தின் புதியபரிமாணமம் குறும்படங்கள். பல மணிநேரத் திரைப்படங்களைச் சிலமணித் துளியில் பிரமிப்பை வழங்குகிறது.தலைமுறையின் குறும்படங்கள்.

ஆண்டுகள் மாதங்கள் தோறும் வெளியாகும் எண்ணிக்கையில் திரைப்படங்கள் அதிகரிக்கும்…என்றாலும் தலைமுறையினரின் குறும்படங்கள் சில மணித்துளிகளில் அரிய பெரியதாக்கங்களிளின் தகவல்களைத் சொல்லி அசத்துகிறது. குறும்படங்கள் உள்ளதை உள்ளபடி நொடியில் சிந்திப்பைச் சீர்திருத்தச் சிறப்பின் நெருடலை உண்டு பண்ணிவிடுகிறது. உண்மை பொய்மை என்பதை அறியவும் பகுப்பாய்வின் பாச்சலையும் விளக்கிவிடுகிறது.

இத்தகைய வெளிப்படை ஜதார்த்தைத்தை கலைச்சுடர் தீபன் குறும்படங்கள் தந்துள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ்கலைஞர்கள் வளர்ச்சியில் வசமாகிச் சுடர்விட்டுத் தலைமுறையினரின் வசப்பட்டு ஜொலிக்கிறது என்றால் இந்தக் காலமும் இனிவரும் காலமும் குறும்படங்கள்--திரைப்படங்களின் தாக்கங்களின் வளர்ச்சியை நிறுத்தி குறும்படங்களின் பரிணாம வளர்ச்சியில் ரசிகர்கள் ரசிப்புத் தன்மை சிறந்தமைய அதிகரித்தால் வியப்பில்லை.

குறிப்பாக இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்கள் அதிகளவு.. உலகில் சினிமா வெளிவருவதும் இந்தியாவில் அதிகம். குறிப்பாகத் தென்னிந்தியவில்தான் அதிகளவு என்பார்கள்.1931 களில் தமிழ் சினிமாபிறந்தது. 1962 களில் ஈழத்தமிழர்களின் முதல் தமிழ் படம் “சமுதாயம்”உருவானது. இந்தப் படத்தை ஒருசிங்கள இயக்குனர்தான் இயக்கினர். அதன் பின்பு 26 ஈழத்துச் சினிமா உருவானது 1983களின் பிற்பாடு புகலிடத்து ஈழத் தமிழர்கள் திரைப்படங்களில் அதிகம் ஈடுபாட்டுடன் இயங்கினார்கள் பல திரைப்படங்கள் வெளிவந்து அப்படியே பின்னடிக்க முடங்கியது..

இப்போது குறும்படங்கள் பேசுகிறது.. குறும்படங்களுக்கு பணமும் நடிகர் பட்டாளமும் தேவையில்லை. திறமையும் தொழில் நுட்பசாதனத்தின் கையாளும் முறைமையும். இருந்தால் வெற்றிபெற்றுவிடலாம். குறும்படங்கள் பேசுவது கைகூடிவிடவும் கைகூடவிட்டாலும் தோல்வி வெற்றிக்கு வாய்ப்புத் தேவையில்லை. கவலைப்படவும் கூடப் பெரும்பாலும் இருப்பதில்லை. பயப்படவும் அவசியமில்லை.செலவினங்கள் இல்லாத அரிய பெரிய அற்புதமான செயல்வடிவம்.

குறும்படங்கள்- விவரணச்சித்திரங்கள். என்பதில் அக்கினிக்கவிஞர் கிறிஸ்ரியனின் கருத்தின் மேலானகவனம் தீபனின் குறும்படங்கள் மீதுள்ளது பாராட்டைப் பெற்றதகவல் சாதனம். இந்த வெளிப்பாட்டின் உண்மைகலைச்சுடர் தீபன் தயாரித்து இயக்கிய குறும்படங்கள். என்பதனாலும் பாரட்டுக்குரியபடைப்பாளி. இவரதுகுறும்படங்கள் பாத்திரங்கள் ஒன்று இரண்டின் வழியாகச் சரியானகாரணங்களை முன்வைக்கிறது சரியான தெளிவாகப் புரிகின்ற வகையில் சொற்ப நேரத்தில் அரிய பெரிய காரணங்களை முன்வைத்துப் படைக்கப்படுகிறது

குறும்படங்கள் நிறையவே வந்துகொண்டிருக்கிறது கலைச்சுடர் தீபன் குறும்படங்களில் வாழ்வியல் நிலைப்பாடுகளே அதிகம் காணப்படுவது. அடுத்த திருப்பம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாத நிலையில் தமிழகத்தின் சினிமா சீரழிவுக்குச் சென்று கொண்டு விட்டது கண்டுதான் இன்றையதலைமுறை தலையில் எடுத்துக்கொண்டு 90 வீதத்திற்கு மேலான குறும்படங்கள் இன்று வந்து கொண்டு இருக்கின்றன. குறும்பட இயக்குனர்களுக்கு வெற்றி வாழ்த்துக் கூறி வரவேற்போம்.

அரவணைப்பு
ஐயம்
அம்மா
அறவை
ஆவர்த்தனம்
இலட்சியவாதிகள்
இப்படியும்இப்போது
இவன்ஒரு
என்தமிழ்
காலாகாலம்
காலங்கள்காத்திருக்காது
கார்த்திகைகாற்றின்கவிதைகள்
மே-18
மௌனத்தாலே
நம்பிக்கை
நேர்தல்
ஒருநாள்
ஒருசுடர்
பார்வையின்தரிசனம்
பாசவேதம்
பட்டறிவு
பலகறை
பொறாமை
போர்க்காலவேடங்கள்
சீவன்
செங்கோன்மை
சிலநிஜங்கள்தொடர் -05
சிற்றுயிர்கள்
தாய்மடி
தாவனம்
தீராததாகம்
தெழிவு
திருப்பம்
தொண்டன்
தோழியின்நட்பு
துப்புரவு
உள்ளம்மட்டும்
உறவைதேடி
உணர்வுகள்
உருவம்
உதாரம்
உயிர்மெய்
உயிர்வலி
வழிகாட்டிகள்
வேசங்கள்
வெற்றிச்செல்வன்
கருவறை
கட்டிமை
கொள்ளி
காதல்தினம்
மாறாதமனங்கள்
மனசெல்லாம்உன்வசம்
மனசெல்லாம்நீதானே
மனசுக்குள்ளே
மண்தந்தமாற்றம்
மறுபக்கம்
கட்டிமை
குடில்

No comments:

Post a Comment