எதுவுமே கிடைக்காத உள்ளக விசாரணையொன்றின் மூலம் எமது மக்கள் நடுத்தெருவில் விடப்படுவதற்கு இலங்கை அரசிற்கு அப்பால் கூட்டமைப்பு முழுமையாக எமது மக்களிற்கு பொறுப்பு கூறவேண்டியிருக்கும். ஆட்சி
மாற்றம் கோசத்தின் கீழ் கூட்டமைப்பே துரோகத்திற்கு பொறுப்பு கூறவேண்டியிருக்கும்.என்றோ ஒருநாள் எமது மக்களிற்கு இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டிவரும். அப்போது இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் மக்களிற்கு செய்த துரோகத்திற்கு கூட்டமைப்பும் பொறுப்பு கூற வேண்டிவருமென எச்சரித்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-
ஒரு சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் உள்ள சனல் 4 முக்கியமான தகவலை பொறுப்பு கூறல் தொடர்பாக வெளியிட்டிருந்தது. தங்களுக்கு ஜ.நாவின் உள்ளக ஆவணம் கசியவிடப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணம் ஜ.நாவுக்கும் இலங்கைக்கும் இடையிலே புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்றும், அந்த புரிந்துணர்வு முழமையான பொறுப்புக்கூறலை உள்ளக விசாரணை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் கசியவிடப்பட்டுள்ள ஆவணத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளதாகவும் சனல் 4 கூறுகின்றது.எம்மைப் பொறுத்தவரையில் உள்ளக விசாரணையினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழமையாக நிராகரிப்பது மட்டுமல்லாது, அவ்வகையான முயற்சியையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
உள்ளக விசாரணை தொடர்பாக ஜநாவில் முதலாவது அமர்வில் பேசப்பட்ட ஆரம்பமான முதலாவது தீர்மானம் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் நாங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றோம். இதேவேளை ஐ.நாவின் தீர்மானம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்து வந்திருந்தோம்.
அன்றே நாங்கள் எச்சரிக்கை செய்த விடயங்கள் தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதை வெளிப்படையாக காணமுடிகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கூட உள்ளக விசாரணைக்கு தாங்கள் இணங்கத்தயார் என்று அவர்கள் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்கள்.
உண்மையிலேயே இலங்கையில் ஒரு உள்ளக விசாணை நடத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அரசாங்கம் மாறியதோடு, உள்ளக விசாரணையை வலியுறுத்துவதால் நன்மை கிடைக்கப்போகின்றதா? என்பது இன்னுமொரு கேள்வியாக உள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கூட உள்ளக விசாரணைக்கு தாங்கள் இணங்கத்தயார் என்று அவர்கள் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்கள்.
உண்மையிலேயே இலங்கையில் ஒரு உள்ளக விசாணை நடத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அரசாங்கம் மாறியதோடு, உள்ளக விசாரணையை வலியுறுத்துவதால் நன்மை கிடைக்கப்போகின்றதா? என்பது இன்னுமொரு கேள்வியாக உள்ளது.
மகிந்த ராஜபக்ஷதான் பிரச்சினை. ஆனால் இன்று இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, ரணில் விக்கிரமசிங்கவோ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவோ பிரச்சனை இல்லை என்று எண்ணக்கூடாது.
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் போர் நடைபெற்ற கடைசி 3 கிழமையாக நான் தான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்ததாகவும், போர் வெற்றிக்கு தான் தான் காரணம் என்றும் சொல்லியிருந்தார்.
தமிழர்களை அழித்த தளபதி சரத் பொன்சேகாவின் சின்னத்தில் மைத்திரி போட்டியிட்டார். அதற்கு நிபந்தனையில்லாத தமிழ் மக்களின் ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்துள்ளது.
இன்னுமொருவர் ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தினை வெல்வதற்கு சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கியது தான் என்கிறார்.மற்றுமொருவர், 75 வீதமான போரை தான் வெற்றிபெற்றார் என்கின்றார். தமிழ் விரோதியான ஜாதிக ஹெல உறுமய இவைகள் தான் இப்போதைய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள்.இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறல் என்ற கோணத்தில் தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பார்களா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த வகையில் தமிழர்களுடைய பொறுப்புக் கூறலை ஒரு உள்ளக விசாரணைக்குகள் கொண்டுவந்து முடித்து பொறுப்புக்கூறலை அடியோடு இல்லாமல் செய்த செயலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக பொறுப்பெடுக்க வேண்டும்.
சிங்கள தரப்பு உள்ளக விசாரணையை கோருவது என்பது அவர்களுடைய தேசத்தினை பொறுத்தவரையில் அது அவர்களுடைய கடமையாக இருக்கும். அவர்கள் தங்களுடைய சொந்த மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுகின்றார்கள்.சர்வதேச சமூகத்தினையும் பிழை சொல்ல முடியாது. அவர்களும் தங்களுடைய நாட்டின் நலன்களைக் கருதியே செயற்படுவார்கள். இவர்கள் தழிழ் மக்களின் நலன்கள் கருதி செயற்படுவார்கள் என்று நினைத்தால் நாங்கள் தான் முட்டாள்கள்.
தமிழ் மக்களுடை நலன்கள் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டியவர்கள் எங்களுடைய பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் எங்களுடைய பிரதிநிதிகள் துணிந்து உள்ளக விசாரணையினை ஏற்கத்தயார் என்று கூறுகின்றார்கள். இவர்கள் தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றார்கள்.
பொறுப்புக்கூறல் ஒரு சர்வதேச விசாரணையின் அடிப்படையில் வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்டது வெறுமனே ஒரு அறிக்கைக்காகவா? ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மனித உரிமை ஆணையாளருடைய அலுவலகத்திற்கு ஒரு விசாணையினை நடத்துவதற்கு கொடுத்த ஆணைகூட பலவீனமானது.
ஏன் என்றால் இறுதியில் இந்த விசாரணை ஒரு அறிக்கையுடன் முடியும். இதையல்ல தமிழ் மக்கள் எதிர்பார்த்தது. இதனைத் தாண்டி சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தமிழர்களுக்கு குற்ற இழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதுதான எங்களடைய நிலைப்பாடு.
ஐ.நாவின் தீர்மானத்தினை விமர்சிப்பது அந்த தீர்மானத்தினை எதிர்ப்பதல்ல. அந்த தீர்மானத்தை பலப்படுத்தி உண்மையிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை கொடுக்கின்றதோடு அவை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இத்தீர்மானத்தினை விமர்சிக்கின்றோம்.
மக்களுக்கு பொய் சொல்லிக் கொண்டு இந்த தீர்மானத்தினை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தவர்கள் நிராகரிக்கப்படாவிட்டால் ஒற்றையாட்சிக்குள் எங்களுடைய தீர்வு முடக்கப்படுவதோடு, தமிழர்களுடைய பொறுப்புக்கூறலும் உள்ளக விசாரணைக்குள் முடக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment