July 30, 2016

கோத்தபாயவை ஆட்சிப் பீடத்தில் ஏற்றவே பாத யாத்திரை முன்னெடுப்பு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆட்சி பீடத்தில் ஏற்றும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்படுவதாக இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணை அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.


மருதானையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை போட்டியிடச் செய்து அவரை ஜனாதிபதியாக்குவதே இந்த பாத யாத்திரையின் நோக்கமாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் கூட்டு எதிர்க்கட்சி செயற்படுகின்றது.

இந்த முயற்சியானது நாட்டின் ஜனநாயகத்தையும், 62 லட்சம் மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.

இந்த முயற்சியை முறியடிக்க எடுக்கக்கூடிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment