யாழ் பல்கலைக்கழகத்தில் அடிவாங்கிய சிங்கள மாணவர்களை ஆசுப்பத்திரியில் சந்தித்தார் ஆளுநர் (photos) யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதலின் போது படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவனை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று பார்வையிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மோதலில் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் முதலில் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறித்த மாணவனைப் பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக தேசிய மருத்துவமனைக்கு விஜயம் செய்திருந்தார்.
அத்துடன் குறித்த மாணவனின் பெற்றோருடனும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே உரையாடல் ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் சுமார் 25 மாணவர்கள் காயமடைந்திருந்ததுடன், நான்கு மாணவர்கள் யாழ். பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment