July 19, 2016

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக நடக்கும் விசாரணைகள் எத்தனை தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரான பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச. யோஷித்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோரின் நிதி மோசடி மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் சம்பந்தமாக 58 விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.


இவற்றில் பாரதூரமாக குற்றச் செயல்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது நடந்த 496 நிதி மோசடி சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

கொலை உட்பட 15 குற்றச் செயல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது. விசேட விசாரணைப் பிரிவு பொலிஸார் 6 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தவிர ஜனாதிபதி ஆணைக்குழு, இலஞ்ச ஆணைக்குழு என்பனவும் மேலும் பல சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சி செய்த குடும்பங்களில் ராஜபக்ச குடும்பமே அதிகளவான மோசடி மற்றும் பாராதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியவர்களாக காணப்படுகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment