July 19, 2016

முச்சக்கர வண்டியுடன் மோதியது இராணுவ வாகனம்! - ஒருவர் படுகாயம்!

இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டி வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் திருகோணமலை- கன்னியா பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். காயமடைந்தவர் திருகோணமலை – கன்னியா பகுதியைச்சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.


No comments:

Post a Comment