July 28, 2016

வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலைய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! விக்கினேஸ்வரன்!

வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் பொருளாதார மத்திய நிலை யத்தை வவுனியாவிலும் மாங்குளத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன்இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடிதமொன்றினையும் நேற்று அனுப்பிவைத்துள்ளார்.

இந்தக் கடிதம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;-
எமது போராட்டத்தினால் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் வடக்கிற்கு கிடைத்துள்ளன.
இந்த பொருளாதார நிலையங்களை அமைப்பதற்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவினை தலா 100 மில்லியன் ரூபா வீதம் இரண்டிற்கும் வழங்கி கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.
அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தில் மிகுதி பணத்தினை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களிலும் ஒரே பொருட்களை சந்தைப்படுத்தாது மாங்குளத்தில் மாமிச உணவு வகைகளையும், வவுனியாவில் மரக்கறி வகைகளையும் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுப்பது சிறந்ததாகும் என்று பலரும் ஆலோசனை கூறி வருகின்றனர்.
இது குறித்தும் நாம் எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment