விடுதலைசெய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோரக் காவல் படையினரிடம் கையளித்துள்ளதாக
இலங்கை கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஸ்.எல்.என்.எஸ். ரங்கராஜ பி. 481 மற்றும் கடலோர காவல்படை கிராஃப்ட் "சிஜி 47" ஆகிய இலங்கை கடற்படையின் கப்பல்களும் "ராணி அபக்கா" மற்றும் "அமையா" ஆகிய இந்திய கடலோர காவல்படை கப்பல்களும் இதன் போது பணியிலீடுபடுத்தப்பட்டன.
No comments:
Post a Comment