July 19, 2016

மைத்திரி பச்சைக்கொடி – நெடுந்தீவில் 67 அடியில் எழும்புகின்றார் புத்தர்?

சர்ச்சைக்குரிய நயினாதீவு விகாரையின் 67 அடி புத்தர் சிலை நிர்மாணப்பணிக்கு இலங்கை ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


முன்னதாக வடக்கில் இம்முறை வெசாக்தினம் பெரியளவில் கொண்டாடப்பட்ட நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினாதீவு நாகவிகாரைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையினிலேயே பின்னர் குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த நயினாதீவு நாகவிகாரைக்கு அண்மையில் உள்ள கடற்கரையில் 67 அடி உயரமுள்ள புத்தர் சிலை அமைப்பதில் அங்குள்ள புத்த பிக்கு முனைப்பு காட்டிவருகின்ற நிலையில் தமிழ் தரப்புக்கள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் கரையோர பாதுகாப்பு திணைக்கள தடைகாரணமாக புத்தர்சிலை நிர்மாணப்பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போது தடையை நீக்கி ஜனாதிபதி மைத்திரிபால சமிக்ஞை காட்டியுள்ள நிலையில் சிலை அமைக்கும் பணிகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கடற்படையினர் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டு இரா பகலாக நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment