June 8, 2016

சம்பூரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் கைது!

சம்பூர் பகுதியில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 9 உள்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து சிறிய படகு ஒன்று, வலை, 2 முகமூடிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதுடன், இவை கடற்படைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளுக்காக சம்பூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment